ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம்பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வு செய்யப்படுகின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி