ஆசிரியர் தின கட்டுரைப் போட்டி; ஆக.,30 இறுதி நாள்

வரும் செப். 5 ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பாக அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் கல்வி இருக்க வேண்டும். 

அதற்காக வரும் செப். 5ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்கும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. 

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் "என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர்' என்ற தலைப்பிலும், 

ஆசிரியர்கள் "வகுப்பறையில் வசந்தம்' என்ற தலைப்பிலும், 

ஆர்வலர்கள் "அரசு பள்ளிகள் நேற்று இன்று நாளை' என்ற தலைப்பிலும்,

கல்லூரி மாணவர்கள் "இப்படித்தான் இருக்க வேண்டும் வகுப்பறை' என்ற தலைப்பிலும் கட்டுரைகளை வரும் ஆக. 30 க்குள் அனுப்ப வேண்டும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 
முத்துக்கண்ணன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூடலூர். மேலும் விபரங்களுக்கு 9488011128, 9944094428 என்ற மொபைல் எண்களில் தொடார்பு கொள்ளலாம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி