ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை -- தினகரன்

முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேனி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.ஆர்.பி தேர்வு, ஆகஸ்ட் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிந்து வெயிட்டேஜ் முறை கணக்கிட்டு பலமாதங்கள் ஆன நிலையில் பணிநியமன அர சாணை உத்தரவுக்காக பல்லாயிரம் ஆசிரியர்கள் காத்திருந்தனர். 

நேற்று முன்தினம் இடைநிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற் றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன உத்தரவுக்கான அர சாணை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

இதில் தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி இடை நிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர் பணிக் கும் தேர்வாகி உள் ளார். ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கும் பணி நியமன உத்தரவு பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து தனலட்சுமி கூறும்போது, முதலில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக முழு ஈடுபாட்டுடன் படித்தேன். இத்தேர்வுக்காக படித்தது எனக்கு அடுத்தடுத்து நடந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசி ரியர் தகுதி தேர்வுக்காக நடந்த டி.இ.டி தேர்வுக்கும் கை கொடுத்தது என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி