பட்டா மாறுதலுக்கு வில்லங்க சான்று கட்டாயம்: வருவாய்த்துறை உத்தரவு

சிவகங்கை,:தமிழகத்தில், பட்டா மாறுதல் திட்டம் செம்மையாக செயல்பட, பட்டா மாறுதல் கோரி வரும் மனுவுடன், முக்கிய ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்,என, உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், வருவாய் துறை மற்றும் பத்திர பதிவு துறை மூலம், அன்றாடம் ஏராளமான பட்டாக்கள் பதிவு செய்யப்படுகிறது. வருவாய் துறையில், விரைவு பட்டா மாறுதல் திட்டம் மூலம் பெறும் மனுக்கள், அம்மா திட்டம், சிறப்பு முகாம், குறைதீர் முகாம், மக்கள் தொடர்பு முகாம்களின் மூலமும், நேரடியாகவும் பட்டா மாறுதல் கோரி மனுக்கள் வருகின்றன.இந்த பட்டா மாறுதல் கோரி வரும் மனுக்களில், உரிய ஆவணங்கள் இன்றி, பத்திர எழுத்தர்கள் தயார் செய்து, பத்திரபதிவு அலுவலகங்களுக்கு அனுப்புகின்றனர். இதனால், சட்ட ரீதியாக வில்லங்கம் ஏற்படுகிறது. இதனால், பட்டா மாறுதல் திட்டத்தை செயல்படுத்துவதில், சுணக்கம் ஏற்படுகிறது.

நெறிமுறைபட்டா மாறுதல் திட்டம் செம்மைபடுத்த, வருவாய், பத்திரபதிவு துறைகள் இணைந்து, சில நெறிமுறைகள் வகுத்துள்ளன. பத்திர பதிவு அலுவலகங்கள் மூலம், பட்டா மாறுதல் கோரி வரும் மனுக்களை, அந்தந்த பகுதி பத்திர எழுத்தர்கள் தயாரித்து தருகின்றனர். இதில், சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க, பட்டா மாறுதல் மனுவுடன், பட்டா மாறுதல் படிவம் (6), தற்போது பதிவு செய்த ஆவண நகல், முன் பதிவு ஆவண நகல் (இறுதியாக பதிந்த ஆவணம்), வில்லங்க சான்று நகல், பட்டா மற்றும் சிட்டா அடங்கல் நகல், 'லேஅவுட்' (உட்பிரிவு, பிளாட்) நகல் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். இவற்றை பெற்று, வாரந்தோறும் செவ்வாய் அன்று, அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். இதன் மூலம், பட்டா மாறுதல் பணியில், சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கப்படும். மேலும், விரைவாக பட்டா மாறுதல் செய்யப்படும், என, பத்திரபதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி