
“இவன் பாட்டாளி மக்களில்
ஒருவன்; பாட்டாளி வர்க்கத்துக்காக வாதாடியவன்;
போராடியவன்” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட
மாஸ்டர்
13.7.2014ல் மாஸ்டரின்
106வது பிறந்த நாள்.
இயக்கநிறுவனர் மாஸ்டர்
இராமுண்ணியின்
இலட்சியங்களை உயர்த்திப்பிடித்து 2.8.1984ல்
‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ என்ற
புதியபதாகையின்கீழ் சமரசமற்ற போராளிகளாக நாம்மீண்டும்
இயக்கப்பயணத்தைத்
தொடர்ந்தோம்.
நாம் மேற்கொண்ட
அந்தப்பாதைமாறாப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து 2.8.2014ல் 31ஆம்
ஆண்டில் தடம்பதிக்கிறது.
இந்த 30 ஆண்டுகளில்
மாஸ்டரின்வழியில் இயக்கம்
பெற்றுள்ள வெற்றிகளையும்,
இன்று நம்முன் எழுந்துள்ள
சவால்களையும்
ஒரு விமர்சனக் கண்
ணோட்டத்துடன்
பரிசீலிக்கவேண்டிய
ஒருவரலாற்றுத்தேவை நம்முன் எழுந்துள்ளது.
இந்தப்பொருத்தமான நேரத்தில் 2002ல் இயக்கம்
வெளியிட்ட “இயக்கம்கண்ட
நாயகன் மாஸ்டர் இராமுண்ணி” என்ற வரலாற்றுநூலைத்
தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயம் நினைவுபடுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இதுவரை நாம் கடந்துவந்த பாதையை மீள்பார்வை செய்திடவும், இனிமேல் கடக்க வேண்டிய
பாதையைப்பற்றிய தெளிவான ஞானம்பெறவும் மாஸ்டர் "இராமுண்ணி" யின்
வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு
ஒருபுதிய வெளிச்சத்தைத்
தரும்: தரவேண்டும்.