வருமான வரி செலுத்துவோர் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யும், வருமான வரி அறிக்கை, வரி திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவற்றின் மீதான நடவடிக்கை குறித்து, எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் அவ்வப்போது தகவல் அளிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடன் அட்டை மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் உடனுக்குடன் அளிக்கப்படுகின்றன. இதேபோன்ற வசதியை வருமான வரி செலுத்துவோருக்கும் அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, வருமான வரித் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரின் கைப்பேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரிகளை திரட்டும் பணியும் நடந்து வருகிறது.