ஒரு வழியாக வழக்குகளால் உண்டான சிக்கல்கள் விலகி நமக்கு வழி பிறக்கும் தருணம் உருவாக்கியுள்ளது.
வழக்குகளின் நிலை
சென்னை நீதிமன்றத்தில் ஓரிரு வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
அந்த ஓரிரு வழக்குகளும் single judge நீதி மன்றப் பிரிவில் இல்லை.அனைத்தும் அமர்வு நீதிமன்றத்தில்தான் உள்ளது.
பொதுவாக single judge நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட தீர்ப்பு அல்லது நிராகரிக்கப் பட்ட மனுவிற்கு எதிராக அமர்வு நீதிமன்றத்தில் writ மனு தாக்கல் செய்யப் படும்.
அமர்வு நீதிமன்றம் என்பது ஒரே வழக்கை விசாரிக்க ஒன்றுக்குமேற்பட்ட நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்தின் ஒரு பிரிவு ஆகும்.ஏனெனில்ஒரே ஒரு நீதிபதி கொண்டு ஒரு வழக்கை விசாரிக்கும் போது அவரது சுய விருப்பு வெறுப்பு காரணமாக தவறான நீதி வழங்க வாய்ப்பு உண்டு.ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை கொண்டு விசாரிக்கும் போது உண்மையான நியாயம் கிடைக்கக் கூடும் என்பதற்கான ஏற்பாடுதான் இது.
இப்பொழுது அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு தன்மைகளின் அடிப்படையில் வழக்கு இருப்பதாகத் தெரிகிறது.
1) 5% தளர்விற்கு எதிரான மேல்முறையீடு
2) G.O MS 71க்கு எதிராக
இனி எத்தனை வழக்குகள் பதிந்தாலும் இந்த 2 வகைகளின் அடிப்படையில்தான் பதியப் படும்.இந்த வழக்குகளுக்கும் விரைவில் விடிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்றைய நிலையில் சென்னை நீதிமன்றத்தில் எந்த வழக்குமில்லை என்ற சூழ்நிலையை நீதிபதி திரு நாகமுத்து உருவாக்கியுள்ளார்.
மதுரையில் உள்ள உயர்நீதிமன்றத்தின் கிளையிலும் திரு பிரபாகரன் அவர்களால் G.O MS 71க்கு எதிராக வழக்குப் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
நம்முடைய அதிர்ஷடமா அல்லது துரதர்ஷ்டமா என்று தெரியவில்லை. திபதி திரு.நாகமுத்து அவர்கள் 07/07/2014 அன்று மதுரை நீதிமன்றத்தில் இணைய வேண்டுமாம்.
மதுரை நீதிமன்றத்திலுள்ள TET குறித்த வழக்குகளையும் நீதிபதி திரு நாகமுத்து அவர்கள் விசாரித்து விரைந்து நீதி வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்.
ஆனால் எத்தனை வழக்குகளும் இருந்தாலும் இதுவரை யாரும் TET பணி நியமனத்திற்கு எதிராக தடையானை வாங்கவில்லை என்பது உற்சாகம் அளிக்கும் செய்தி.
காலிப் பணியிடங்கள் குறித்த சர்ச்சை
காலிப் பணியிடங்கள் குறித்து முக்கியமாக பாட வாரியாக உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து வரும் செய்திகள் பெரும் குழப்பத்தையும் மன சோர்வையும் ஏற்படுத்துகிறது.
இங்கு
1.Subject
2.2011-2013 April Total Vac.
3.In 2012 Advertised only.
4.TET passed and get posting
5.Backlog Vac (advertised) in 2012
6.After filling 2012 Remaining Vac. 2011-2013
7.2011 to 2013 remaining+Backlog
...1..............2.........3..........4..........5.........6...........7
Tamil....... 2298...2040..1812...228....258.....486
Eng........4826... .3193....2998..195...1633...1828
Math......2664....1686 ....1367...319....978...1297
Phy....... 1454......532......413...119.... 922....1041
Che........1453......815......650.....165...638......803
Bot...........625.......81........63.......18...544......562
Zoo...........622.......89........7.........16...533......549
His.........4304.....1304...1185......119..3000....3119
Geo.......1076.........80.......75.........5....996....1001
O.Lag......110.........91.......91.........0......19........19
Total....19432......9911...8727....1184...9521...10705
என்ற காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் பலரால் நம்பப் படுகிறது.
ஆனால் எனக்கு எழும் சந்தேகம் என்னவென்றால்,
1) TET 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012 december 13 ஆம் தேதி அன்று பணி நியமனம் வழங்கப் பட்டது.
அப்படி இருக்கும் பொழுது 2012 ஆம் December மாதத்திலேயே 2013 ஆம் ஆண்டு April வரை உள்ள காலிப் பணியிடங்களின் விவரம் எவ்வாறு சேகரிக்கப்பட்டது?
இந்த ஒரு கேள்விக்கு சரியான விடை கிடக்கவில்லை என்றாலே இந்த புள்ளி விவரம் அனைத்தும் தவறு என்ற நிலைக்கு வந்து விடுகிறது.
2) வரலாற்று ஆசிரியருக்கு வயதாகி ஓய்வு பெற்று காலிப் பணியிடங்கள் உருவாகும் போது தமிழாசிரியருக்கு வயதாகாதா?
3) இயற்பியலுக்கு 1454 காலிப் பணியிடங்கள் இருக்கும் போது 532 பணியிடங்களுக்கும்,வரலாறுக்கு 4304 காலிப் பணியிடங்கள் இருக்கும் போது வெறும் 1304 காலிப் பணியிடங்களுக்கும் விளம்பரம் கொடுக்கும் போது தமிழில் இருந்த 2298 காலிப் பணியிடங்களுக்கு 2040 காலிப் பணியிடங்கள் உள்ளது என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதின் தர்க்கம் என்ன?
இப்போது கல்விச்செய்தியில் வெளியாகி உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த தகவல் உண்மையென்று நம்புவோம்.இதனோடு 2012-2013 வரை காலிப் பணியிடங்களும் ஏன் 2013-2014 வரை உள்ள காலிப் பணியிடங்களும் சேர்த்து ஒரு கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்படும் என்று எதிர்பார்ப்போம்.
பணி நியமனம் எப்போது?
இந்த ஒரு கேள்விக்கு யாரேனும் உறுதியான பதில் அளித்தால் அவருக்கு 1 கோடி பரிசலிக்கலாம்.ஆனால் விடைதான் யாருக்கும் தெரியாதே!
வரும் 10 ஆம் முதல் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடை பெற உள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் திரு விஜயகாந்த் நானிருக்கும் தொகுதிதான்.அவர் இங்க அடிக்கடி வந்தாலும் எதுவுமே பேசுவதில்லை.இங்கேயே பேசாதவர் சட்டசபையில் அதுவும் நம்மை குறித்து பேசுவாரா என்பது சந்தேகம்தான்.
ஆனால் எதிர்க்கட்சியும், இன்ன பிற உதிரி கட்சிகளும்
"2013 ஆம் ஆண்டு TET இல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஏன் இன்னும் பணிநியமனம் வழங்கவில்லை?"
என்று கேள்வி எழுப்புமானால் நமக்கான செயல் விரைந்து நடைபெற சூடு பிடிக்கும்.
ஆனால் கேட்பார்களா? என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி!
அன்புடன் மணியரசன்