சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலையில், பி.ஏ., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:சென்னை பல்கலையில், இளங்கலை பட்டப்படிப்பு தேர்வுகள், ஏப்ரலில்நடந்தன. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.முடிவுகளை, www.results.unom.ac.in, www.chennaionline.com, உள்ளிட்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மேலும், மொபைல் போனில், 'result UNOMUGREGNO' என்ற அடிப்படையில், பதிவு செய்து, 56263 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.தேர்வு முடிவு அடிப்படையில், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும், கல்வியாண்டு, 2011 - 12க்கு பிந்தைய மாணவர்கள், 8ம் தேதி முதல், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து, ஒரு பாடத்திற்கு, 750 ரூபாய் வீதம், 'THE RIGISTRAR, UNIVERSITY OF MADRAS' என்ற பெயரில், டி.டி., எடுத்து, இம்மாதம், 15ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டலுக்கு, வரும் 14ம் தேதிக்குள், ஒரு பாடத்திற்கு, 200 ரூபாய் வீதம், டி.டி., எடுத்து, விண்ணப்பக் கடிதத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.உடனடி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 15ம் தேதிக்குள், இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி