மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகில இந்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசுபதில் கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆறாவது ஊதியக் குழு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க பரிந்துரை செய்யவில்லை என்றும், இதை அப்பொழுது மத்திய அரசு 29.08.2008 அன்றைய தீர்மானத்தில் ஏற்றுகொண்டது என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் கோரிக்கை இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.