ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு:இணையதளத்தில் அழைப்பு கடிதம் வெளியீடு


ஆசிரியர் பயிற்சி, முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்கான இணையதள வழி கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

        இதுகுறித்து, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
 
          முதலாம் ஆண்டு படிப்பில் சேர, 4,520 விண்ணப்பங்கள் வந்தன. இதில், மாணவர்கள், 464 பேர்; மாணவியர், 4,056 பேர். அனைத்து மாணவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியலை, www.scert.org என்ற, துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம்.

            மேலும், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதமும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அழைப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
          தபால் மூலமாகவும், அழைப்பு கடிதத்தை அனுப்பி உள்ளோம். கலந்தாய்வுக்கு வரும் போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி., இருப்பிட சான்றிதழ், சிறப்பு பிரிவினராக இருந்தால், அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.
 
         வரும், 7ம் தேதி, ஆங்கில வழி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மொழிப்பாடங்கள், சிறப்பு பிரிவினர்.வரும், 8ம் தேதி, தொழிற்கல்வி பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்கள்.
 
              வரும், 9ம் தேதி, கலைப்பிரிவு மாணவர்கள்.வரும், 10, 11, 12ம் தேதிகளில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும்.தினமும் காலை, 9:00 மணிக்கு, கலந்தாய்வு துவங்கும்.
 
               கலந்தாய்வு, 30 மாவட்டங்களில், குறிப்பிட்ட மையத்தில் நடக்கிறது. இதுகுறித்த விவரங்களையும், இணையதளத்தில் பார்க்கலாம்.இவ்வாறு, இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி