போலி இ-மெயிலுக்கு பதில் அளிக்காதீர்: வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருமான வரி செலுத்த வேண்டிய விவரங்களை பதிவு இறக்கம் செய்து கொள்ளும்படி வரி செலுத்துவோர் பலருக்கு மின் அஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது. இந்த மின் அஞ்சல் "incometaxindia.gov.india@gmail.com" முகவரியிலிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது. இது போலியானது என்றும், வருமான வரி துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வருமான வரி துறை தெரிவித்துள்ளது.


இது போன்ற எந்த தகவலையும் வருமான வரி துறை gmail, yahoo போன்ற மின் அஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புவது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், வருமான வரி செலுத்துவோர் இது போன்ற மின் அஞ்சலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது இணைத்து அனுப்பப்படும் எந்தவிதமான ஆவணத்தையோ பதிவு இறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


இது போன்று ஏதேனும் போலியான மின் அஞ்சல் வந்தால் வருமான வரி துறையின் தேசிய இணையதளத்தில் உள்ள 'ரிப்போர்ட் ஃபிஷிங்' பகுதியை பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி துறையின் www.incometaxindia.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருமான வரி துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி