திண்டுக்கல்: டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 பேரின்நியமனத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ய உத்தரவையடுத்து, திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி., சீனிவாசன், கூட்டுறவு இணைப்பதிவாளர் செல்வகுமரன் ஆகியோர் விடுமுறையில் சென்றனர்.
கடந்த 2005 ல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 91 பேர்வருவாய் கோட்டாட்சியர், டி.எஸ்.பி., கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், வணிக வரி அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.மெயின் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் நீங்கலாக 83பேரின் நியமனத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில ்தேர்வான, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி., சீனிவாசன்,கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் செல்வகுமரன் ஆகியோர் தீர்ப்பை கேட்டதும் விடுமுறையில் சென்று விட்டனர்.