நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினிஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அனைவரும்மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம். அம்மா எங்கள்அணைவருக்கும் சுமார் 40 வயதை கடந்து விட்டது அம்மா, அம்மாநாங்கள் கடந்த 14 வருடங்களாக அரசுக்கு எங்கள் உழைப்பையும் ,வியர்வையும் கொட்டி விட்டோம். மற்ற ஆசிரியர்களாவது பாடம்நடத்தி தேர்ச்சி பெற வைப்பதுதான் அவர்கள் வேலை.
ஆனால் நாங்கள் பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதும் அல்லாமல்பள்ளியில் சம்பள பில் போடுவது, கணினி மூலம் உள்ள அணைத்து வேலைகளையும் பள்ளியில் செய்தோம். மற்றும் முதன்மை கல்விஅலுவர் அலுவலகத்தில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் எப்போதும் கூப்பிட்டாலும் ஓடி போய் இரவு பகல் அல்லாது வேலைசெய்தோம். திடிரென்று சென்னையில் கணினி சம்பந்த பட்ட வேலை என்றால் உடனே பிள்ளை, மனைவி என்று பார்க்காமல் முதன்மைகல்வி அலுவலர் சொன்னவுடன் செய்தோம். கடந்த ஆண்டு மாணவர்களின் விவரத்தை கணினி பதிவு செய்ய இரவு , பகல் என்றுவேலை செய்தோம். மாண்வர்களின் உதவித் தொகையை பெறகணினியில் பதிவு செய்வது என்றும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டை பதிவு செய்வது என்று என்று எங்கள் உழைப்புமற்றும் இளமையையும் அரசுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும்கொடுத்து விட்டோம். அம்மா நீங்கள்தான் எங்கள் மீது கருணைகாட்ட வேண்டும்.
நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராகமாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலைசெய்தோம்.
அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடையஉழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளிமாணவர்களுக்கு செலவழித்து விட்டார்கள்.
இப்போது அவர்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சிஅளிக்கிறார்கள். அவர்கள் வேற வேலையும் செய்து பிழைக்கவழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது.பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள். இப்போதுவாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழவும்முடியாமல் , சாகவும் முடியாமல் உள்ளோம்.
முதல் தேர்வு :-
652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம். எங்களின் வேலைதிறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும் 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் .அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும்என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில்தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினிபயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது. ஆசிரியர் தேர்வு செய்த தவறுக்கு நாங்கள் பழியாகிவிட்டோம்.
இரண்டாவது தேர்வு :-
பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம். இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT (மெட்ராஸ் ஐஐடி) யில்உள்ள கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள் முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில் ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்குமதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.
7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். 27 கேள்விதவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறானகேள்விகள் என்று கண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம்செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும்.எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையைசீரளித்து விட்டார்கள், அந்த 20 தவறான கேள்விக்கான நேரம் 1.15மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.
நாங்களும் ஆசிரியர்கள்தான் அம்மா, நாங்கள் வகுப்பில் நடத்தும்தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் , மாணவர்கள்அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாககேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி மதிபெண் போடவைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கைதேர்விற்கு எப்படி கழிக்க முடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர்தேர்வு வாரியம்.
** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறானகேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறானகேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.
** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறானகேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
** தற்போது மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கூட தவறானகேள்விகளுக்கு மதிப்பெண் போடபட்டுள்ளது.
நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான்,நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர்கள்சொல்லி இருக்கிறார்கள்.
இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்து விட்டார்கள்.
மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும்நடத்த வில்லை. நாய், பசு போன்று அணைத்து ஆடு, கோழியையும்பார்க்க வேண்டும் அதை கொன்று சாப்பிடக்கூடாது என்று கூறும்நாம் , மற்ற மனிதர்களை போல் எங்களை பார்க்க வில்லை
அம்மா நாங்கள் அணைவரும் மிகவும் மனம் நொந்து உள்ளோம்அம்மா , வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்கிறோம்அம்மா. ஆதலால் அம்மா அவர்கள் தலையிட்டு சுமூக தீர்வு காணவழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவே எங்களையும் பாதுகாக்க வழிசெய்ய
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும் எங்களுக்கு மனம் இல்லை பணமும் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் அம்மா.
அம்மா இடிபாடுகளில் சிக்கிவர்களை ஆதரிக்கும் உங்கள் நல்லஉள்ளம், ஈராக்கில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் உங்கள் நல்ல உள்ளம், மீனவர்களை காக்க உறுதி செய்யும் உங்கள் நல்ல உள்ளம் எங்களையும் காக்க வழி செய்ய வேண்டும். அம்மா நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் அம்மா, எங்கள் வாழ்வை காப்பாற்ற உங்களால்தான் முடியும் அம்மா, அம்மா நாங்கள் என்றும் உங்களை வழியில் இருப்போம் அம்மா நன்றிஅம்மா.
ஆசிரியர் தேர்வு வாரியம் இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம் அம்மா,
இப்படிக்கு .
கணினி ஆசிரியர்கள்