பொதுத் தமிழ் - பொது அறிவு

* திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
ஒன்பது

* திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
133

* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்?
காரைக்கால் அம்மையார்

* தமிழின் முதல் உலா நூல் எது?
திருக்கயிலாய ஞான உலா

* திருமுறைகளுள் பழமையானது எது?
திருமந்திரம்

* பதினோறாம் திருமுறையின் வேறு பெயர்?
பிரபந்தமாலை

* கோவைக் கலித்துறை என்பது?
கட்டளைக் கலித்துறை

* சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல்?
நன்னூல்

* வேளாண் வேதம் எனப்படும் நூல்?
நாலடியார்

* பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல்?
பரிபாடல்

* தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல்?
புறநானூறு

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்?
திருமூலர்

* ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல்?
தக்கயாகப் பரணி

* பள்ளு நூல்களுல் சிறந்த நூல்?
முக்கூடற்பள்ளு

* முதல் தூது இலக்கியம்?
நெஞ்சுவிடு தூது

* தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது?
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு

* பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர்?
குமரகுருபரர்

* முதல் கலம்பக நூல்?
நந்திக் கலம்பகம்

* தமிழில் தோன்றிய முதல் சிறுகதை?
குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

* சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்?
அலை ஓசை

* முதற் சங்க காலத்து இலக்கண நூல்?
அகத்தியம்

* தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம்?
மணிமேகலை

* புலவர்க்கு ஒளடதம் என அழைக்கப்படும் நூல்?
நைடதம்

* இயல் இசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல்?
சிலப்பதிகாரம்

* தமிழின் முதல் வரலாற்று நாவல் எது?
மோகனாங்கி

* தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
மெளனி

* முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது?
பெருங்கதை

* அணியிலக்கண முதல் நூல் எது
தண்டியலங்காரம்

* பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது ?
மதுரைக் காஞ்சி

* பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்?
முல்லைப்பாட்டு

* திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை?
பாடாண்திணை

* அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர்?
களியாற்றினை நிரை

* அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர்?
நெடுந்தொகை

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல்?
முதுமொழிக் காஞ்சி

* வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர்?
மூதுரை

* இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல்?
தொல்காப்பியம்

* கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர்?
குமரிக்கோட்டம்

* கந்தரந்தாதி பாடியவர்?
அருணகிரி நாதர்

* பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர்?
சிவப்பிரகாசர்

* காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர்?
அதிவீரராம பாண்டியன்

* திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர்?
கோபால கிருஷ்ண பாரதியார்


* கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர்?
ஆபிரகாம் பண்டிதர்

* கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர்?
உ.வே. சாமிநாதையர்

* கம்பர் யார் என்ற நூலை இயற்றியவர்?
டி.கே.சிதம்பரநாத முதலியார்

* புதுமை வேட்டல் நூலை இயற்றியவர்?
திரு.வி.க.

* காவிய காலம் என்ற நூலை வெளியிட்டவர் யார்?
எஸ். வையாபுரிப் பிள்ளை

* அஞ்சிறைத் தும்பி என்ற மொழியியல் நூலை வெளியிட்டவர்?
மயிலை சினி.வேங்கடசாமி

* நான்முகன் திருவந்தாதி எழுதியவர் யார்?
திருமழிசை ஆழ்வார்

* பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
பெரியாழ்வார்

* அமலாதிபிரான் பதிகம் பாடியவர் யார்?
திருப்பாணாழ்வார்

* கலித்தொகையத் தொகுத்தவதின் பெயர்?
நல்லந்துவனார்

* தமிழின் முதற்காப்பியம் எது?
சிலப்பதிகாரம்

* ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்

* நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
விளம்பி நாகனார்

* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
மதுரைக் கூடலூர் கிழார்

* திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
நல்லாதனார்

* இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
பூதஞ்சேந்தனார்

* கார் நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
மதுரைக் கண்ணன் கூத்தனார்

* ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
மாறன் பொறையனார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி