வெயிலில் படும்படி வைக்கும் தண்ணீர், குளிர்பானங்களை பயன்படுத்தினால் பிளாஸ்டிக் ரசாயனம் கலக்கும் அபாயம் உள்ளது" என விழிப்புணர்வு பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சேலாஸ் கிராமத்தில் நேற்று நுகர்வோர் விழிப் புணர்வு பிரசாரம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லசாமி தலைமை வகித்தார். குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி வரவேற்றார். ஊர் தலைவர் குமார், கவுன்சிலர் ராம்சுந்தர் முன்னிலை வகித்தனர். குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மகளிர் கல்லூரியின் நுகர்வோர் மன்ற மாணவியரின் குறு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நுகர்வார் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசுகையில், "குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கடைகளில், வெயிலில் படும்படியாக வைத்தால் அவற்றில் பிளாஸ்டிக் ரசாயனம் கலப்பு ஏற்பட்டு உடல் நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெயிலில் காயும் குளிர்பானம் உயிருக்கு எமனாகும் வாய்ப்புள்ளது.
மொபைலில் 20 நிமிடத்திற்கு மேல் பேசுபவர்களுக்கு மூளையில், பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை மொபைலில் பேச வைப்பதை தவிர்க்க வேண்டும். உயிருக்கும் உடமைக்குமான பாதுகாப்பு, தேர்ந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறுவது, நிவாரணம், கல்வி, தூய சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நுகர்வோரிடம் அனைத்து உரிமைகள் இருக்கிறது. இவற்றை பயன்படுத்த வேண்டும்" என்றார்