தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,''என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில்,பள்ளிக் கல்விமற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:
ம.ம.க., ஜவாஹிருல்லா: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் வெளிப்படையாக, இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது, உரியகுழுக்கள் அமைத்து தான் தேர்வு செய்யப்படுகிறது. பல்கலைமானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை.
பார்வர்டு பிளாக், கதிரவன்: தமிழகத்தில், பி.எட்., படிப்பு, இரண்டாண்டாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, டி.இ.டி.,தேர்வு எழுத வேண்டுமா?
பழனியப்பன்: மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுபடிப்பாக மாற்றுவது தொடர்பான ஆலோசனையை தெரிவித்துள்ளது.மத்திய அரசோ, மாநில அரசோ, இதைஅமல்படுத்தவில்லை.தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும்தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.