என்.சி.டி.இ., விதிகள் படி ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்:யு.ஜி.சி., தலைவர் கடிதம்

ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு (என்.சி.டி.இ.,) விதிகளின் படி, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்' என, பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) தலைவர் வேத பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.யு.ஜி.சி., தலைவர், அனைத்து ஆசிரியர் படிப்புகளை வழங்கும் பல்கலைகள், மத்திய பல்கலைகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளுக்கு, ஆசிரியர் கல்வி குறித்த கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறைக்கு, உயர்கல்வித்துறை, பல்கலை கல்வியியல் துறைகள் மூலம், அதிகளவில் உதவி வருகிறது. ஏற்கனவே உள்ள கல்வியியல் துறைகள் மற்றும் புதியதாக துவக்கப்படும் கல்வியியல் துறைகளை மேம்படுத்த, யு.ஜி.சி., பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.யு.ஜி.சி., நிதியை பெறும் பல்கலைகள், கல்வியியல் துறையை உருவாக்குவது தொடர்பாக, 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு, பரிந்துரை அளிக்க வேண்டும். அதே போல், ஏற்கனவே, கல்வியியல் துறையை கொண்டுள்ள பல்கலைகள், அத்துறை மேம்பாடு தொடர்பான, யு.ஜி.சி.,யின் பரிந்துரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை, உறுதி செய்ய வேண்டும்.ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் பரிந்துரைப்படி ஆசிரியர் கல்வி பாடத் திட்டம் இருக்க வேண்டும்.கவுன்சிலின் விதிகளின் படி, ஆசிரியர் கல்வி படிப்புகள் அமைந்திருக்க வேண்டும்.

  • ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்புகளை கொண்டு வர வேண்டும்
  • யு.ஜி.சி., ஆசிரியர் கல்லுாரிகள், பல்கலை வளாகத்தில் இருப்பின், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான, புத்தாக்க பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
  • ஆசிரியர் கல்வியில் புதிய யுக்திகளை உருவாக்க வேண்டும்.
  • ஆசிரியர் கல்வியில், முதுகலை படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
  • ஆசிரியர் கல்வி குறித்த அனைத்து ஒழுங்கு முறைகளும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் விதிகள் படி அமைந்திருக்கிறதா என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல், கல்லுாரி ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லுாரி இயக்குனர்களுக்கும், கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், கல்லுாரி ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லுாரிகளில், ஆசிரியர் பட்டப்படிப்புகளை துவக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி