நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள்.

இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 45 எம்பி மட்டுமே
மென்பொருளை தரவிறக்க சுட்டி
- See more at: http://asiriyarvoice.blogspot.in/2014/07/blog-post_6469.html#sthash.xqfaWjD3.6GGSl8fi.dpuf