நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். டெல்லி உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்;

உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதியான மோடிக்கு 18 மில்லியன் பேஸ்புக் நண்பர்கள் உள்ளனர். மோடியின் பேஸ்புக்கில் அவரது தாயார் அவரை ஆசிர்வாதிக்கும் புகைப்பட காட்சி வியப்பளிக்கிறது. அது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமானது. சமூக ஊடங்களின் முக்கியத்துவத்தை மோடி உணர்ந்துள்ளது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இந்தியாவில் தான் அதிகம் பேர் மொபைல் போனில் பேஸ்புக் பார்க்கிறார்கள்.

தேர்தலின் போது பலர் பேஸ்புக்கை பயன்படுத்தியது உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தையாகும். உற்சாகத்துடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் கிடைக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா காட்சி தருகிறது என மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷெரில் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி