மங்கள்யான் விண்கலம் 75% சதவீத பயண தொலைவை வெற்றிகரமாக கடந்துவிட்டது. வரும் செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அது சென்றடையும்.
2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் 'மங்கள்யான்' விண்கலம் ஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ரூ.450 கோடி செலவில் தயாரான இந்த விண் கலத்தில் 4 சிறிய ரக ராக்கெட் இன் ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூமியில் இருந்து 680 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப் பட்ட 'மங்கள்யான்' விண்கலம், தற்போது 510 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஒரு வினாடியில் 28 கி.மீ தூரத்தை கடக்கக்கூடிய இந்த விண்கலம், கடந்த 7 மாதங்களாக விண்ணில் பயணம் செய்து வருகிறது. விண்கலத்தில் உள்ள 4 இன்ஜின்களும், இலக்கை நோக்கி உந்தி தள்ளக்கூடிய 22 நியூட்டன் கருவிகளும் கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் செயல்படுகின்றன. இவற்றை இயக்கிவிடும் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் 16 வினாடிகளில் செய்து முடித்தனர். மங்கள்யானின் பயணத்தை தொடர்ந்து கண்காணிக்கும் விஞ் ஞானிகள், அதற்கு நேரும் தடை களை கூர்ந்து கவனித்து களைகின் றனர். வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விண்கலம் வேறு பாதைக்கு மாறும். அதனையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்ட படி செய்து முடிக்க உள்ளனர். எனவே மங்கள்யான் விண்கலம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை சென் றடையும். அதன்பிறகு, விண்கலத்தில் உள்ள தகவல் அனுப்பும் 5 கருவிகள், செவ்வாய்கிரகத்தில் நிலவும் தட்ப வெப்பநிலை, அதன் வளிமண்டலம், பௌதிக அமைப்பு போன்றவை தொடர்பான விவரங் களை அவ்வப்போது பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். மங்கள்யானை கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடை பெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.