ரூ.2,699-க்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்! கார்பன் மொபைல்ஸ் அறிமுகம்




மிகக்குறைந்த விலையில் லோ பட்ஜெட் ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது கார்பன் மொபைல்ஸ் நிறுவனம். 

இந்நிலையில், மார்க்கெட்டிலேயே மிகக்குறைந்த விலையில், ரூ.2,699-க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது கார்பன் மொபைல்ஸ்.ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆபரெட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஏ-50-எஸ் என்ற இந்த மாடலில் 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் மீடியாடெக் டுவல் கோர் பிராசசர் இருப்பதால்கிராபிக்ஸ் நன்றாக வேலை செய்கிறது. டூவல் சிம்முடன் வெளிவரும் இந்த மாடலில் 3.5 இன்ச் எல்.சி.டி. ஸ்கீரீன் உள்ளதால் வீடியோ காட்சிகளை தெளிவாக பார்க்கலாம். 32 ஜி.பி. வரை மெமரி கார்டு சப்போர்ட் உள்ளது.இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் காம்பேக்டாகவும், ஸ்லிம்மாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதன் எடையும் வெறும் 120 கிராம் தான். மற்றபடி, வழக்கம்போல ஜி.பி.எஸ்., வை-ஃபை, புளூடூத், எல்.இ.டி பிளாஷ் சப்போர்ட் போன்றவையும் உள்ளன.ஆனால், மைனஸ் பாயின்ட்களும் நிறைய உள்ளது. குறிப்பாக, கேமிராவை பொறுத்தவரை 2.0 மெகா பிக்சல் மட்டுமே பிரண்ட் மற்றும் ரியர் கேமிராக்கள் உள்ளது. 3ஜிசப்போர்ட்டும் கிடையாது. 1100 எம்.ஏ.எச் பேட்டரியுடன் கொண்ட இந்த மாடலில் பேட்டரி பேக்அப் பெரிய மைனஸ்.

பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டுமே முதற்கட்டமாக கிடைக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி