வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு

  • தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
  • 2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
  • தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. எனவே, ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
  • வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.
  • பிரிவு 80 (சி)-ன் கீழ் முதலீடு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.
  • வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அதேவேளையில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி