அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை 2015க்குள் அடைய முடியுமா?

வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

யுனெஸ்கோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
உலகெங்கிலும் மொத்தம் 57.8 மில்லியன் குழந்தைகள் ஆரம்ப பள்ளி செல்லாமல் உள்ளனர். அதில் இந்தியாவின் பங்கு 1.4 மில்லியன்(14 லட்சம்). இதன்மூலம், தொடக்கப் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில், உலகளவில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் வருகிறது. பாகிஸ்தானும் முதல் 5 நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் பற்றி, Education for All (EFA) என்ற பெயரில், யுனெஸ்கோ அமைப்பு, ஒரு உலகளாவிய ஆய்வு நடத்தியது. அதில்தான், மேற்கண்ட விபரம் தெரியவந்துள்ளது. குழந்தைகளை ஆரம்ப பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கையில், மிகவும் எளிய நாடுகளான நேபாளமும், புருண்டியும் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகளாவிய அளவில் பள்ளிக்கு செல்லாத 43% குழந்தைகளில், ஆண்களின் எண்ணிக்கை 1 கோடி. பெண்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இந்தியா, இந்தோனேஷியா, நைஜர், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில், ஒவ்வொன்றிலும், 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி