13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி

தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 66 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 145-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் உள்ளன.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் தகுதிக்கு இணையான பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாவட்ட கல்வி அலுவலர் அளவிலான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், மத்திய சென்னை உள்ளிட்ட 17 டி.இ.ஓ. பணியிடங்களும், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 டி.இ.இ.ஓ. பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல், 5-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அதோடு, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி