இன்று (04.07.2014 )10 & 12 ஆம் வகுப்புகளில் தமிழை முதன்மை பாடமாக எடுத்து மாநில அளவில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாண்பு மிகு முதல்வர் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்



தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 2013-2014ஆம் கல்வியாண்டில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் 42 மாணவ, மாணவியர் முதலிடத்தையும், 184 மாணவ மாணவியர் இரண்டாம் இடத்தையும், 382 மாணவ மாணவியர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஜெயலலிதா, “உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் தங்களைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி