டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த, நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை, 10 நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். எனினும், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியான நிலையில், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டது. மேலும், தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான, பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை, கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, தலைவர் பதவியை பாலசுப்ரமணியன் கவனிப்பார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி