அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அடைமொழியால் குறிப்படுபவர் யார் என்ற வினாக்கள் ஒன்று அல்லது இரண்டு இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டு பெர்னாட்ஷா யார் என வினா இடம்பெற்று அதற்குரிய விடைகளாக வெவ்வேறு பெயர்களாக நான்கு கொடுத்திருப்பார்கள். அவற்றில் சரியான, அடைமொழிக்குரிய சான்றோரின் பெயரைத் தேர்ந்தெடுத்து விடையளிக்க வேண்டும்.

இதில் சரியான விடைகளைப் போல தோற்றமளிக்கும் விதமாக நான்கு விடைகளையும் கொடுத்திருப்பார்கள். நன்கு யோசித்து வினாவைப் புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். இப்படி விடைகளை ஒன்றுக்கு இரண்டு முறை கவனித்து சரியாக விடை அளித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது உறுதி.

உதாரணமாக...
தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா என மு. வரதராசனார் அவர்களையும், தென்னாட்டு பெர்னாட்ஷா என அறிஞர் அண்ணாவை குறிப்பிடுவோம். இதில் குழப்பமடையாமல் யார் தமிழ்நாட்டு பெர்னாட்ஷா, யார் தென்னாட்டு பெர்னாட்ஷா என சிந்தித்து சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற குழுப்பமான கேள்விகளைப் படித்து தெளிந்து விடையளிக்கப் பழகிக்கொண்டால் பசடநஇ ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி கனியை சுவைக்கலாம். 


தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்
கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
ஆளுடை நம்பி - சுந்தர்ர்
ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்
மூதறிஞர் - இராஜாஜி
பேரறிஞர் - அண்ணா
பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
தசாவதானி - செய்குத் தம்பியார்
இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
கல்வியிற் பெரியவர் - கம்பர்
சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி