அண்ணா பல்கலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்சி படிப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்சி. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக் மீடியா ஆகிய இரண்டு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் விநியோகிக்கப்படுகின்றன.

பிளஸ்-2 முடித்து 21 வயதை நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையத்தில் பதிவுக் கட்டணம் ரூ.700-ஐ ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணத்தை வரைவோலையாக இணைத்து விண்ணப்பிக்கலாம்.
வரைவோலையை "இயக்குநர் (சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம்' என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 17 கடைசி தேதியாகும். மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி