சீனாவுடன் இந்தியா போட்டியிட ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு

இந்தியா மீண்டும் பாதைக்கு திரும்புகிறது: சீர்திருத்தத்துக்கான செயல்திட்டம்’ என்ற சீர்திருத்தங்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால் ஆற்றல், அளவு, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும். இந்த நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இந்த மனித வளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்களது ஆற்றலை மேம்படுத்துவது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

இன்றைய சமூகத்தில் நல்ல ஆசிரியர்கள் மிகப்பெரிய தேவையாக இருக்கிறார்கள். ஆனால் மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

நமது தேசியக்கொடியை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிறம், இரண்டாவது பசுமைப்புரட்சியை இந்தியா கொண்டு வரவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த இரண்டாம் பசுமைப்புரட்சி, வேளாண் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்குதல், மதிப்பு கூட்டுதல், வேளாண் தொழில் நுட்பம், சேமிப்புக் கிடங்கை பன்முகப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
வெள்ளை நிறம், வெண்மைப் புரட்சியை எடுத்துக்காட்டுகிறது. இது பால் உற்பத்தியைப் பெருக்கவேண்டும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
காவி நிறம், நமது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. நாட்டுக்கு காவிப்புரட்சியும் தேவைப்படுகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சக்தி தேவையை சந்திக்க ஏற்றவிதத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப்பெருக்குதல், சூரிய மின்சக்தியைப் பெருக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
உள்கட்டமைப்பு அபிவிருத்தி என்பது நெடுஞ்சாலையிலிருந்து மின்பாதைக்கு திரும்ப வேண்டும். கண்ணாடி இழை நெட்வொர்க்கிற்கு திரும்ப வேண்டும்.
நகரங்கள் முன்பு ஆற்றங்கரைகளால் கட்டமைக்கப்பட்டன. இப்போது நெடுஞ்சாலைகளால் கட்டமைக்கப்படுகின்றன. இனி அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு வரவேண்டும்.
தேசியக்கொடியில் அசோக சக்கரம் நீல நிறத்தில் உள்ளது. இது மீன்வளத்தைப் பெருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப்பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டுமானால், மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால், 100 மிடுக்கான நகரங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி