ஓய்வு பெறும் அரசு டிரைவருக்கு தபால் தலை வெளியீடு


திண்டுக்கல் சமூகநலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் டிரைவரை பெருமைபடுத்த, அவரின் தபால் தலை வெளியிடப்படவுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி,58. இவர்,திண்டுக்கல் சமூகநலத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 1981ல் பணிக்கு சேர்ந்து 33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இவர் வரும் ஜூன் 30 ல் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பரிசு பொருட்களை வாங்கி தரநினைத்த சமூக நலத்துறை ஊழியர்கள், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியதை பாராட்டி, இவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தபால்தலையை ஜூன் 30 ல், திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் வெளியிடுகிறார். இது குறித்து சமூகநலத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறுகையில், "ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் மோதிரத்தை வாங்கி கொடுத்தால், அந்த நேரத்தில்தான் சந்தோஷமாக இருப்பார். அதே நேரத்தில் வரலாற்றில் இடம் பெறும்அளவிற்கு தபால் தலை வெளியிடுகிறோம்,” என்றார். ஓய்வு பெறும் டிரைவர் குழந்தைசாமி கூறுகையில், "நான் விபத்து இல்லாமல் வாகனத்தை ஓட்டினேன். எனக்கு குழந்தை இல்லை. அதே நேரத்தில்அனைத்து ஊழியர்களும் எனக்கு குழந்தையாக இருந்து என்னை புகழின் உச்சிக்கே அழைத்து சென்று தபால் தலை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். இது எனது கண்களில் ஆனந்தகண்ணீராக பொழியசெய்கிறது,” என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி