பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாபல்கலைக்கழகம் தேர்வு நடத்தும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை மட்டும் வெளியிடலாம் என்றும் பிற கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடக்கூடாது என்றும் கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தேர்ச்சி விகிதத்தின்படி கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசைப்பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தந்தது. உயர்நீதிமன்றத்தின்இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்லூரிகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. தரவரிசைப் பட்டியலுக்கு உள்கட்டமைப்பையும் மதிப்பிட வேண்டும் என கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி