2014 ஜூன் மாத விலைவாசிக் குறியீட்டு எண் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு சதவீதம் வெளியிடப்படும். இதன் பிறகு தான் நிதித் துறை அமைச்சகம் அகவிலைப்படி உயர்வு பற்றி பரிந்துரை செய்யும். 7% அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு மட்டுமே. இதைவிட குறைய வாய்ப்பு இல்லை. 8% ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
கடந்த (மே) மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அகவிலைப்படி 7% விட அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
அகவிலைப்படி உயர்வு பற்றிய இறுதி நிலை ஜூலை 31 ஆம் தேதி தெரிய வரும்.