நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேலும், 2013 -14 -ஆம் ஆண்டு முதல், ஜிபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆண்டு அறிக்கை நகல்கள் இனி மாநில கணக்காயர் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்பு நிதியாண்டு முதல், ஜிபிஎப் ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.