மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், குழந்தையின் மறுவாழ்வு நடவடிக்கைகள் பாதிக்கும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்க, அதிக செலவாகும். அத்தகைய ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கலாம். அவர்கள் இடமாற்றத்தை ஏற்க மறுத்தால், அவர்களிடம் தானாக முன்வந்து பதவி விலகி விடும்படி கேட்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, மத்திய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
for more info : Click Here