ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய மையம் இலவச பயிற்சி; மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதற்காக மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கட்டணமில்லா பயிற்சி
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மனிதநேய கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட பல்வேறு மத்திய, மாநில பணிகளுக்காக நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்ள இலவச பயிற்சி அளித்து வருகிறது.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேய மையத்தில் படித்த 46 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்நிலை தேர்வுதொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுக்காக மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை முதல்நிலை தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கிறது.

இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியும், ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்ய, சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் நுழைவுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்நுழைவுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் 2 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேய மையத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 22.7.2014 ஆகும். 23.7.2014 முதல் மாணவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்தில் தேர்வு எழுத விரும்புகிறார்களோ, அந்த மாவட்டங்களில் தேர்வு எழுத நுழைவுத்தேர்வுக்கான தங்களின் ஹால்டிக்கெட்டை மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள், தங்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டையை ஹால்டிக்கெட்டுடன் கொண்டுவரவேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 3-ந் தேதி நடைபெறும். மேற்கண்ட தகவல்கள் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி