அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ் ரேண்டம் நம்பர் நாளை வெளியீடு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (சுயநிதி) படிப்பிற்கான ரேண்டம் என்களை நாளை (ஜூன் 18) காலை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிடுகிறார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர 7651 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2014-15 கல்வி ஆண்டிற்கு எம்பிபிஎஸ் 150 இடங்கள், பிடிஎஸ் 100 இடங்கள் ஆகியவற்றிற்கான அனுமதி சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறவுள்ளது. அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறுகிறது.


மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். கலந்தாய்வு அட்டவனை விரைவில் வெளியிடப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழகஅரசு விதிப்படி ஒதுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பத்தவர்களுக்கு ரேண்டம் எண்களை நாளை புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிடுகிறார். ரேண்டம் எண்கள் குறித்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiauniversity.ac.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி