தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று (16/06/2014 - திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பணியிட மாறுதல்ஆண்டுதோறும் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைவிகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணி நடைபெறும்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-இன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும்பதவி உயர்வு கலந்தாய்வு, நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, 18-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு நடக்கிறது.

மாவட்ட தலைநகரங்களில்...

இதேபோல், இன்று வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 18-ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு, 19-ந் தேதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு, 23-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்குபணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 24-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி செய்வதற்கான கலந்தாய்வு, 26-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி