பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற ஸ்மிரிதி ராணி ஆலோசனை!

நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளைவிளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணிஆலோசித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வேலைநாட்கள் என்று அறிவித்து, அந்த நாளில்பள்ளிகள் வழக்கம்போல இயங்குவது வழக்கம்.ஆனால், சனிக்கிழமைகளில் நாட்டில் உள்ளஅனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு நாள் என்று அறிவித்து, பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுக்குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தி,புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாகநடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்மிரிதி ராணிஆலோசித்து வருவதாகவும், இதற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கிவிட்டதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.

அதன் படி பள்ளிகளில் உள்ள விளையாட்டுவசதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலமெங்கும் உள்ள பள்ளிகல்வி துறைகளை சேர்ந்தவர்களுக்கு இதுக்குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி