தந்தையின் பிறந்த நாளை கொண்டாட அவருக்கு விடுமுறை அளிக்குமாறு 5 வயது சிறுமி கூகுள் நிறுவனத்திற்கு கடிதம்



கலிபோர்னியா, ஜூன் 22- : புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அச்சிறுமி கீழ்க்கணடவாறு எழுதியிருந்தாள்.

“எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார விடுமுறை சனிக்கிழமை தான் வருகிறது. எனவே அவரது பிறந்த நாளின் போது அவர் என்னுடன் இருப்பதற்கு அவருக்கு நீங்கள் புதன் கிழமை விடுமுறை தரவேண்டும். 

இக்கடிதத்தை படித்து ஆச்சரியம் அடைந்த டேனியல் உடனடியாக அச்சிறுமிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அக்கடிதத்தில் “எங்கள் நிறுனத்தின் திறமையான ஊழியர்களுள் உன் தந்தையும் ஒருவர். அதனால் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அந்த வாரம் முழுவதுமே விடுமுறை அளிக்கிறேன்” என்று எழுதியிருந்தார். 

இந்த இரண்டு கடிதங்களின் புகைப்படங்களும் அமெரிக்க செய்தி நிறுவனங்களின் சிறப்புச்செய்தியாக பரபரப்பை கிளப்பி வருகிறது.

Courtesy : http://www.maalaimalar.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி