490 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும்?

பள்ளிக்கல்வித்துறையில் 2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 19ம் தேதி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த 699 பேர் அடங்கிய சுழற்சி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 490 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளுக்கு தனியாக கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். பதவி உயர்வு பெற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி