வரும் 29ம் தேதி, தமிழக அரசின், 'குரூப் -2' தேர்வும், பாரத ஸ்டேட் வங்கியின்புரபஷனரி அலுவலர் தேர்வும் நடப்பதால், இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தவித்து வருகின்றனர்.
இரு பதவிகளுக்கும், குறைந்தபட்ச கல்வித்தகுதி, பட்டப்படிப்பு. போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். அவை ஒரே நாளில் நடப்பதால், ஏதாவது ஒருதேர்வை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிஉள்ளனர்.பாரத ஸ்டேட் வங்கியின் புரபஷனரி அலுவலர் தேர்வு, நாடு முழுவதும் பல கட்டங்களாக, ஜூன் 14, 29 தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'கள் அனுப்பப்பட்டு உள்ளன. டி.என்.பி.எஸ்.சி.,யின் வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்துத்தேர்வு, ஜூன் 14ல் நடக்கிறது. இத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுவிட்டது. குரூப்-2 தேர்வை, ஜூன் 29க்கு பதில், வேறொரு தேதியில் நடத்த வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.