TNPSC அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம்


முதல் அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம் (1951 ஜூன்): சமூகம் மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியிருப்பவர்களின முன்னேற்த்திற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பதை 39 ஆவது சட்டபிரிவு தடை செய்யாது. 
வன்முறையைத் தூண்டுதல், வெளிநாடுகளுடனான நட்புறவைப் பாதித்தல் போன்ற வகையிலபேசுவது குற்றமாக்கப்படும் வகையில் பேச்சுரிமையின் 19 ஆவது பிரிவு மாற்றப்பட்டது. தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தும் வகையில் 31ஏ பிரிவு திருத்தப்பட்டதுபார்லிமென்ட் மற்றும் சட்டப்பேரவை கூட்டங்களுக்கான இடைவெளி ஆறு மாதகாலத்திற்கு அதிகமாகக் கூடாது எனக் கூறும் வகையில் 85ம், 174ம் சட்டப்பிரிவுகள திருத்தப்பட்டன. அதே போல் ஒவ்வொரு ஆண்டின் முதல் பாராளுமன்றக் கூட்டத தொடரில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்துவார் எனக் கூறும் திருத்தமும் செய்யப்பட்டது. 

2-வது அரசியல் அமைப்புச் சட்டம் (1953, மே): 1951-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் பாராளுமன்ற உருப்பினர்கள் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டது. 3-வது திருத்தம் (1955, பிபிரவரி): வாணிபம் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் போன்றவை மத்திய, மாநிலஅரசுகள் கூட்டு அதிகாரத்தினுள் கொண்டு வரப்பட்டது. 

4-வது திருத்தம் (1955, ஏப்ரல்): அரசு பொதுக்காரியத்திற்கு என்று வாங்கும் நிலத்திற்கு அளிக்கப்படும இழப்பீடு போதாது என்று கோர்ட்டுக்கு செல்வதை தடை செய்யும் வண்ணம் 31வது பிரிவு திருத்தப்பட்டது. 

5-வது திருத்தம் (1955, டிசம்பர்): மாநிலங்களின் நிலப்பரப்பு, எல்லை ஆகியவற்றைப் பாதிக்குமசட்டத்தை பாராளுமன்றம் இயற்றுவதற்கு முன் சம்மந்தப்பட்ட மாநில சட்டப்பேரவையில் அது பற்றி விவாதிக்க போதிய காலம் அளிக்கப்பட வகை செய்யப்பட்டது. 

6-வது திருத்தம் (1956, செப்டம்பர்): மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தின் மீது மைய அரசு வரிவிக்க-வகை செய்யப்பட்டது. 7-வது திருத்தம் (1956, அக்டோபர்): மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வகை செய்யப்பட்டது. 

8-வது திருத்தம் (1960, ஜனவரி): பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் ஆங்கிலோ இந்தியர் ஆகியோருக்கான இட-ஒதுக்கீடு மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 

9-வது திருத்தம் (1960, டிசம்பர்) சில பிரதேசங்களை பாகிஸ்தானுக்கு அளிப்பதை அனுமதிக்கும் திருத்தம். 

10-வது திருத்தம் (1961, ஆகஸ்ட்): இந்திய யூனியனுடன் தாத்ரா நாஹர் ஹவேலி பகுதிகள் இணைப்பிற்கு வகை செய்யப்பட்டது. 11-வது திருத்தம் (1961, டிசம்பர்): துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்தின்- இரு சபை உறுப்பினர்கள் அ"ங்கிய தேர்தல் குழுவிற்கு வழங்கப்பட்டது. 

12-வது திருத்தம் (1962, மார்ச்): கோவா, டையு, டாமன் ஆகியவை இந்திய யூனியனுடன் இணைக்கப்பட வகை செய்தது. 

13-வது திருத்தம் (1962, டிசம்பர்): நாகாலாந்து, இந்தியாவின் 16 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட-வகை செய்தது. 

14-வது திருத்தம் (1962 டிசம்பர்): யூனியன் பிரதேசங்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் இருக்க வகை செய்யப்பட்டது. 

15-வது திருத்தம் (1963, அக்டோபர்): உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக-உயர்த்தியது. 

16-வது திருத்தம் (1963, அக்டோபர்): பொது நன்மைக்காக அடிப்படை உரிமைகளில் சில கட்டுப்பாடுகளவிதிக்கப்பட்டது. பார்லிமென்ட், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாட்டின் 
ஒருமைப்பாட்டை மதிப்பதாக உறுதிமொழி எடுக்க வகை செய்யப்பட்டது. 

17-வது திருத்தம் (1964, ஜூன்): தனியார் சொத்துக்களை அரசு எடுக்கும் போது அப்போதைய சந்தை நிலவரப்படி இழப்பீடு அளிக்க வேண்டும். 

18-வது திருத்தம் (1966, ஆகஸ்ட்): பஞ்சாப், அரியானா மாநிலப் பிரிவினையை அனுமதித்தல். 

19-வது திருத்தம் (1966, டிசம்பர்): தேர்தல் வழக்குகளை விசாரிக்க நிறுவப்பட்ட தனி மன்றங்கள் அகற்றப்பட்டு அந்த விசாரணை அதிகாரம்--உயர்நீதி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டது. 
20-வது திருத்தம் (1966, டிசம்பர்): மாவட்ட நீதிபதி நியமனத்தை முறைப்படுத்தியது. 

21-வது திருத்தம் (1967, ஏப்ரல்): எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது. 
22-வது திருத்தம் (1969, செப்டம்பர்): மேகாலயா மாநிலம் உருவாக்க வகை செய்தது. 

23-வது திருத்தம் (1970, ஜனவரி): பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ஆங்கிலோ இந்தியருக்கு மேலும்10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிக்க வகை செய்தது. 

24-வது திருத்தம் (1971, நவம்பர்): கோலக்நாத் வழக்கின் மீது எழுந்த பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது பாராளுமன்றத்திற்கு அரசியல் அமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் 
உரிமை இருப்பதாக அறிவித்தகு. மேலும் இந்த திருத்தத்தின் படி குடியரசுத் தலைவர் 
அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவிற்கு கையெழுத்திட்டே ஆக 
வேண்டும். 

25-வது திருத்தம் (1972, ஏப்ரல்): பொதுக் காரியங்களுக்காக அரசு கையகப்படுத்தும் 
நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை பற்றிய வழக்குகள் 
நீதிமன்றத்தின் விசாரணைக்கு அப்பாற்பட்டவை ஆக்கப்பட்டது. 

26-வது திருத்தம் (1971, டிசம்பர்): மன்னர் மானியம் ஒழிக்க வகை செய்தது. 27-வது திருத்தம் (1972, ப்ரவரி): இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மிசோரம், அருணாசலப் பிரதேசம் என்ற இரு மத்திய ஆட்சிப்பகுதிகள் உருவாக்கப்பட வகை செய்தது. 

28-வது திருத்தம் (1972, ஆகஸ்ட்): ஐ.சி.எஸ் அதிகாரிகளின் சிறப்புச் சலுகைகள் அகற்றப்பட்டன. 29-வது திருத்தம் (1972, ஜூன்): கேரள மாநில நிலச் சீர்திருத்தச் சட்டம், நீதி மன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டவை என அறிவிக்கப்பட்டது. 

30-வது திருத்தம் (1972, பிப்ரவரி): உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் தகுதி வரையறுக்கப்பட்டது. 

31-வது திருத்தம் (1973, அக்டோபர்): லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. 

32-வது திருத்தம் (1974, ஏப்ரல்): மத்திய அரசு பல்கலைக் கழகங்களுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டது. 

33-வது திருத்தம் (1974, ஏப்ரல்): 9 வது அட்டவணையில் மாநிலங்களின் நிலச் 
சீர்த்திருத்தச் சட்டங்கள் சேர்க்கப்பட்டு நீதிமன்றவிசாரணைக்குஅப்பாற்பட்டதாக்கப்பட்டன.

35-வது திருத்தம் (1975, பிபிரவரி): சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக உருவானது. 

37-வது திருத்தம் (1975, மே): அருணாசலப் பிரதேசத்திற்கு சட்டப்பேரவையும், அமைச்சரவையும அனுமதிக்கப்பட்டது. 

38-வது திருத்தம் (1975): அவசரச் சட்டம் நெருக்கடி பிரகடனம் 
நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டது. 

39-வது திருத்தம் (1975, ஆகஸ்ட்): குடியரசுத்தலைவர், துணைகுடியரசுத்தலைவர், பிரதமர், லோக்சபாசபாநாயகர் தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிமன்ற அதிகார 
வரையறைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது தனியொரு விசாரணைக்குழு விசாரிக்கும் 9-வது அட்டவணையில் மேலும சில சட்டங்கள் இணைக்கப்பட்டன. 

40-வது திருத்தம் (1976, மே): 9-வது அட்டவணையில் மேலும் சில சட்டங்கள், சொத்து, உச்சவரம்பு கடத்தல்காரர்களின் சொத்து பறிமுதல், தவறான விஷயங்கள் பிரசுரமாவதைத்
தடுத்தல், கடல்பரப்பின் எல்லைகள், ஆழ்கடல் கனிவளங்கள் பற்றியவை. 

41-வது திருத்தம் (1976, செப்டம்பர்): பொதுப்பணித் தேர்வு ஆணைக்குழு உறுப்பினர்களின் 
ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது. 

42-வது திருத்தம் (1976, டிசம்பர்): ஒரு மினி அரசியல் அமைப்பு என்று கூறும் அளவிற்கு ஏராளமான அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டன. 
* சமயச்சார்பற்ற சோஷலிசம் என்ற சொற்கள் அரசியலமைப்பின் முகப்புரையில் 
இணைக்கப்பட்டது. அடிப்டைக் கடமைகள் இணைக்கப்பட்டது. 
* அரசியல் அமைப்பு திருத்தத்தில் பாராளுமன்றத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. திருத்தங்கள் நீதிமன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது. 
* அரசின் வழிகாட்டும் நெறிகள், அடிப்படை உரிமைகள் விட 
சக்தி வாய்ந்ததாக்கப்பட்டது. 
* குடியரசுத்தலைவர் அமைச்சரவை ஆலோசனைப்படிதான் செயல்பட 
வேண்டும். 
* கல்வித்துறை, மத்திய மாநில அரசுகளின் இணைப்பட்டியலில் 
சேர்க்கப்பட்டது. 
* மத்திய அரசு சட்டங்களை செல்லாது என்று கூறும் உயர்நீதிமன்றத்தின் 
அதிகாரம் உட்பட மற்றும் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. 
* ஆட்சித்துறை விசாரணை மன்றங்கள் நிறுவியது. 
* தேசத்துரோக செயல்கள் பிரிக்கப்பட்டு அவற்றை ஒடுக்க பாராளுமன்றம் 
சட்டம் இயற்றலாம். 

43-வது திருத்தம் (1978, ஏப்ரல்): உயர்நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிமன்ற அதிகாரங்கள் மீண்டுமஅளிக்கப்பட்டது. தேசதுரோக செயல்கள் பற்றி பாராளுமன்றம் சட்டமியற்றலாம் 
என்ற 42-வது திருத்தப்பிரிவு ரத்து செய்யப்படும். 

44-வது திருத்தம் (1979, ஏப்ரல்): உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் சம்பந்தமான அரசு அதிகாரங்கள்மட்டுப்படுத்தப்பட்டது. நெருக்கடி காலத்தில் திருத்தப்பட்ட அரசியல் 
அமைப்புகள் பல நீக்கப்பட்டது. சொத்துரிமை, அடிப்படை உரிமை பட்டியலிருந்து நீக்கப்பட்டது. 
45-வது திருத்தம் (1980, ஏப்ரல்): பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், ஆங்கியோ இந்தியர் இட ஒதுக்கீடு மேலும்10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. 

46-வது திருத்தம் (1983, பிப்ரவரி): மாநில அரசுகள் விற்பனை வரிவசூல் சம்பந்தமான குறைபாடுகள் நீக்கப்பட்டது. 47-வது திருத்தம் (1984, ஆகஸ்ட்): 9-வது அட்டவணையில் மேலும் 14 சட்டங்கள் இணைக்கப்பட்டு நிலச சீர்திருத்தச் சட்டங்கள் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது. 

48-வது திருத்தம் (1984, ஆகஸ்ட்): பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஒராண்டிற்கு நீடிக்கப்படவகை செய்தது. 

49-வது திருத்தம் (1984, செப்டம்பர்): திரிபுரா மாநிலத்தில் மாவட்ட சுய ஆட்சி கவுன்சில்கள் செயல்படஅனுமதித்தது. 6வது அட்டவணை அம்மாநிலத்தில் அமல் செய்யப்பட்டது. 

50-வது திருத்தம் (1984, செப்டம்பர்): ஆயுதப்படை, பாதுகாப்பு படை மற்றும் சி.பி.ஐ. அதிகாரசெயல்பாடுகளை கட்டுப்படுத்த பாராளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதித்தது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி