01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 04 முடிய மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் 01) இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பட்டியலை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்ததந்த பள்ளியின் அறிவிப்பு பலகையில் (சூடிவiஉந க்ஷடியசன) ஒட்டி வைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை சார்ந்த தலைமை ஆசிரியகளிடமிருந்து பெற்று தங்களது அலுவலக கோப்பில் வைக்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இப்பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள் ஏதேனும் மாறுபாடு இருப்பின்( ழுநுசூனுநுசு, னுஹகூநு டீகு க்ஷஐசுகூழ னுஹகூநு டீகு துடீஐசூஐசூழு ) அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெயர்கள் விடுப்பட்டிருப்பின் அன்னாரின் விண்ணப்பத்துடன் (முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-யாக இருப்பின் டி.ஆர்.பி-யின் தர எண்ணை டி.ஆர்.பி அலுவலகத்தில் தற்போதைய நிலையில் பெற்று) கருத்துருவை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பம் மற்றும் பரிந்துரையுடன் சமர்ப்பிக்கவும், மற்றும் இம் முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் தகுதி அல்லாதோர் பெயர் சேர்க்கப்பட்டிருப்பின் அது குறித்த விவரத்தினையும் தவறாமல், இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் ( 16-05-2014 ) க்குள் கண்டிப்பாக தெரிவிக்கவும் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இதில் ஏதேனும் கவனக்குறைவு ஏற்படும் பட்சத்தில், அவற்றிற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே முழு பொறுப்பாவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பொறுத்தமட்டில் அவர்களின் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமை எண்-படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்பு பெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து தற்போது பெறப்பட்ட அவர்களின் தர எண்/ வருடத்தின் அடிப்படையிலும், தற்காலிக பணி வாய்ப்பு/பதவி உயர்வு/கருணை அடிப்படை நியமனம் பெற்றவர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கு தர எண் இல்லாத நிலையில், அவர்களின் பதவி உயர்வு முற்றிலும் கிடைக்கப் பெறாத நிலை ஏற்படும் என்பதால், அவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, கருணையோடு பரிசீலினை செய்து, அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சார்ந்த ஆசிரியர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் படி, ஆண்டின் கடைசியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் தர எண்/ ஆண்டு ஆகிய விவரத்தினை ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து தற்போதைய நிலையில் பெற்று குறிப்பிட்ட நாளுக்குள் அளிக்கும் பட்சத்தில், அவர்களின் வரிசை அதன்படி மாற்றி அமைக்க பரிசீலிக்கப்படும் எனவும். இது சார்பான ஆதாரம் பெற்று இணைக்கப்படாத முறையீடுகள் எவையும் பரிசீலிக்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்வாறான முறையீட்டினை தங்களின் நிலையிலேயே தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆதாரம் உள்ள முறையீடுகளை உடன் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்து சமர்ப்பிக்கவும் , நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது