
கன்னியாகுமரி : ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியன்று, முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் சூரியன் மறையும் போது, சந்திரன் உதிக்கும் அபூர்வ காட்சியை காண முடிகிறது.
அதன்படி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று சித்ராபவுர்ணமி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மாலை அந்த அபூர்வ காட்சியை பார்க்கலாம். இந்த அபூர்வ காட்சியை இந்தியாவிலேயே கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க முடிகிறது. இதை காண பல மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் இன்று காலை முதலே கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்க முடிகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க,கன்னியாகுமரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.