மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் பெயர் பள்ளிகளுக்கு தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சமச்சீர் கல்வி வந்துள்ளதால் தனியார் பள்ளிகள் மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் என்று விளம்பர படுத்த தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 

கடலூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலில் உள்ளது. இதன்படி அரசு பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியன்டல் பள்ளிகள் ஆகியவற்றில் சமமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என்று விளம்பரம் செய்து வருகிறது. இது தவறானது. அப்படி விளம்பரம் செய்வதால் அரசு பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சமச்சீர் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் பொது கல்வி அமைப்பின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. எனவே மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியன்டல் பள்ளிகள் என்று விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இப்படி விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அரசுக்கு மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் அருணாஜெகதீசன், வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்து அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜரானார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி