தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், இணையதளத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, 12ம் தேதி நிறைவுபெற்றது. அனைத்து தொகுதி ஓட்டுகளும், சட்டசபை தொகுதி ஓட்டுகளும், நாளை எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை, உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிட, தேர்தல்கமிஷன் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில், முன்னணி நிலவரம் மற்றும் முடிவுகளை, http://www.cciresults.nic.in என்ற இணைய தளத்தில், பொதுமக்கள் பார்வையிடலாம்.