செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா?ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்--- தி இந்து நாளேடு

ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. 

அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-
தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லியுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில்அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி