கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் விற்றால் கடைகளுக்கு சீல்


திருச்சி:கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் விற்றால் கடை களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சுகாதாரத்துறை இயக்குனரக அதிரடி உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே 100 மீ. சுற்றளவுக்குள் கடந்த 26ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதுவரை 25க்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான சிகரெட், பீடி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களான பான்பராக், குட்கா, ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, உணவு பாதுகாப்பு துறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை என்பதால் மாநகரில் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப் பட்டுள்ளது. சில கல்லூரி கள் மட்டும்தான் திறந்திருக்கிறது. 

ஜூன் முதல் வாரத்தில் இருந்து 100 மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளது. 
ஜூன் துவக்கத்தில் சோதனையின்போது புகையிலை விற்கப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி