பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவு

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி தேர்வுத்துறை வெளியிட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலம் தெரிந்து கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள 7ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள பதிவு செய்யும் முறை; HSC ****** (Registration Number) to 53576 என்று பதிவு செய்ய வேண்டும்.


குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஒப்புகை செய்தி பெறும் வரை தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட பிறகு கட்டணம் பெறப்படும். பதிவு செய்து கொள்ளவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. பிளஸ் 2 தேர்வு முடிவு அறிந்து கொள்ள ரூ.3 தானாகவே கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி