தமிழகத்தில், எஸ்.எம்.எஸ்., மூலம், மின் கட்டண விவரம் தெரிவிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, இன்று, துவக்கி வைக்கிறார்.தமிழகத்தில், வீடு, வணிகம், தொழிற்சாலை என, மொத்தம்,2.44 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர்.மின் கட்டணம் குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, கட்டண தொகையை, பணம், காசோலை, வரைவோலை, இணையதளம் என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்க செல்லும் போது, பலர் வீடுகளில் இருப்பதில்லை. இதனால், மின் நுகர்வோர், குறித்த காலத்திற்குள், மின் கட்டணம் செலுத்த தவறி விடுகின்றனர்.
இதையடுத்து, மின் பயன்பாடு, கட்டணம், பணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்களை, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் நுகர்வோருக்கு தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்த சேவையை கேட்டு, நேற்று, வரை, 2.10 கோடி நுகர்வோர்கள், மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளனர். எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின் கட்டண விவரம் தெரிவிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலகத்தில், இன்று, காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.